புதுச்சேரி: புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பினர் வாழ்வாதாரத்தை உயர்த்த கைத்தொழில் கூடிய நிதியுதவி வழங்க வலியுறுத்தி கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
புதுச்சேரி மாநில பழங்குடி மக்கள் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி இருளர் இனத்தை இந்திய அரசியலமைப்பு சட்டம் அட்டவணை பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த இனத்தை 2021 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்கக் கோரி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் பழங்குடி மக்கள் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் தலைமையில் புதுச்சேரி சுதேசி காட்டன் மில் அருகில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மிஷின் வீதி அருகே முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது புதுச்சேரி இருளர் எஸ்டி மக்களுக்கு சிறப்புக் கூறு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பூர்வீகத் தொழிலான வேட்டையாடுதல் வனத்துறையால் தடை செய்யப்பட்டதால் மக்கள் வறுமையில் வாடுவதாகவும் எனவே வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு கைத்தொழில் கூடிய நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கமிட்டனர்.