கேரள மாநிலம் வயநாடு அருகேயுள்ள காட்டுநாயக்கர் காலனியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் சிவக்குமார் (24). நேற்று (செவ்வாய்) மாலை வீட்டை விட்டு சென்றவர் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இளைஞர் வசிக்கும் பகுதி அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் காவல்துறையினர் வனத்துறையின் உதவியுடன் காணாமல் போன இளைஞரை வலைவீசி தேடினர். இந்நிலையில், புல் பள்ளி அருகிலுள்ள காட்டில் காணாமல் போன இளைஞர் சிவக்குமார் தலை மற்றும் பாதி கால்களுடன் சதையில்லாமல் எலும்புக்கூடாக கிடந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.