பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நாட்டு அதிரபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டார். இருநாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் என்பதே அந்த அறிவிப்பு.
இந்த கூட்டு ராணுவ பயிற்சி இருதரப்புக்கும் இடையேயுள்ள ஆழமான உறவைக் குறிக்கிறது. அமெரிக்கா- இந்திய ராணுவப் படைகள் 1992ஆம் ஆண்டு முதல் (மலபார் கூட்டு ராணுவ பயிற்சி) கூட்டுப் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கூட்டுப் பயிற்சியின் முதன்மை நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையே ஒருவருக்கொருவர் பாதுகாப்பை புரிந்துக் கொள்வதாகும். இந்திய கடற்படை எதிரிகளை தாக்கி எளிதாக அழிக்கும் பல சிறப்பு தகுதிகளைக் கொண்டது.
மூன்று பக்கங்களாலும் கடலால் சூழப்பட்ட ஆசிய துணைக் கண்டதை ஆள்கிறது. அமெரிக்க கடற்படை பசிபிக், அட்லாண்டிக் கடற்கரையில் ஒரு பிடியை கொண்டுள்ளது. இருப்பினும் அந்த கடல்களில் பயன்படுத்தப்படும் யுக்திகளை காட்டிலும், இந்திய கடற்பகுதிகளில் பயன்படுத்தப்படும் யுக்திகள் வேறுவகையானதாக இருக்கும்.
அனைத்து கடல்களிலும் ஒரே மாதிரியான யுக்தியை கொண்டு வெற்றி பெற முடியாது. இதனை அமெரிக்கா புரிந்துக் கொண்டுள்ளது. ஆகவே இந்த கூட்டுப் பயிற்சியில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது.
இந்தியாவும்- அமெரிக்காவும் கடந்த 27 ஆண்டுகளாக கூட்டுப் பயிற்சி மேற்கொள்கின்றன. இதில் ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றியுள்ளனர். நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட கருவிகள் இருநாடுகளின் ஒப்புதலின் பேரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போர் ஒத்திகை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த ஒத்திகை பயிற்சிகள் போர் என்பதை காட்டிலும், கடல் மாசுபாட்டை தவிர்த்தல், பேரழிவுகளின் போது இடமாற்றம் உதவி, கடற்கொள்ளையர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான மலபார் (1992) என்ற கடற்படைப் பயிற்சியில் ஜப்பானும் அதிகாரப்பூர்வ பங்காளியாக மாறியது. இந்த ஒப்பந்தத்தின் அதி முக்கியத்துவத்தை உணர்ந்து ஜப்பான் இவ்வாறு நடந்துக்கொண்டது. ஜப்பான் மலபார் கூட்டுப் பயிற்சியை 2007ஆம் ஆண்டு நடத்தி முத்தரப்பு பங்காளியாக மாறியது (அதாவது இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்).
இந்த கூட்டுப் பயிற்சியில் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவும் இணைந்துக் கொண்டது. இதன் விளைவாக, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இராணுவ உறவுகள் வலுப்பெற்றுள்ளன.