நாட்டின் தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் இன்று மாலை 5.45 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.5 என பதிவாகியிருந்தது.
இந்தப் பூமி அதிர்ச்சி காரணமாக குடியிருப்புகளில் தங்கியிருந்த மக்கள் பதற்றத்துடன் வெளியே வந்தனர். டெல்லியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன.