தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைக்கிறது: ஆய்வில் தகவல்

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் வேளையில், ஹென்றி ஃபோர்டு ஹெல்த் சிஸ்டம் வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடனான சிகிச்சையானது கோவிட்-19 இறப்பு விகிதத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

By

Published : Jul 5, 2020, 10:08 PM IST

ஹைதராபாத்: ஹென்றி ஃபோர்டு வரையறுக்கப்பட்ட சில அளவுகோல்களைக்கொண்டு இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அதில் நல்ல முடிவு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பக்க விளைவுகள் எதுவும் தென்படவில்லை எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் வேளையில், ஹென்றி ஃபோர்டு ஹெல்த் சிஸ்டம் வெளியிட்டுள்ள ஒரு புதிய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடனான சிகிச்சையானது கோவிட்-19 இறப்பு விகிதத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

2020 மார்ச் 10 முதல் மே 2 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,541 நோயாளிகள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் 13 விழுக்காடு பேர் மட்டும் இறந்துவிட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட உடனேயே பெரும்பான்மையானவர்களுக்கு மருந்து கொடுக்கப்பட்டது. அதில் 24 மணி நேரத்திற்குள் 82 விழுக்காட்டினரும், அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 91 விழுக்காட்டினரும் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

அசித்ரோமைசினுடன் மட்டுமே கொடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டவர்களில் 22.4 விழுக்காடு பேர் இறந்துவிட்டதாகவும், அஜித்ரோமைசின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட 20.1 விழுக்காடு பேர் இறந்துவிட்டதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டு மருந்துகளும் இல்லாமல் சிகிச்சைப் பெற்றவர்களில் 26.4 விழுக்காட்டினர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒட்டுமொத்தமாக, ஆய்வில் மருத்துவமனையில் நோயாளிகள் 18.1 இறப்பு விகிதத்தை அடைந்துள்ளனர். அவர்கள்,

  • 65 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகள்
  • காகசியன் என அடையாளம் காணப்பட்ட நோயாளிகள்
  • ஆக்ஸிஜன் அளவு குறைந்த நோயாளிகள்
  • ஐ.சி.யூ சேர்க்கை தேவைப்படும் நோயாளிகள்

பொதுவாக இறந்த நோயாளிகளுக்கு நாள்பட்ட சிறுநீரகம் மற்றும் நுரையீரல் நோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் இருந்துள்ளன. அதில் 88 விழுக்காட்டினர் சுவாசக் கோளாறால் இறந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details