தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த உடலுடன் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவமனை! - BL Mansuriya

பார்மரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கினால் அவசர சிகிச்சைப் பிரிவில் இறந்தவர் உடலை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வைத்துகொண்டு, பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்து, 15 நிமிடங்கள் தான் அந்த உடல் அங்கு இருந்தது என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

பார்மர் அரசு மருத்துவமனை
பார்மர் அரசு மருத்துவமனை

By

Published : Jul 7, 2020, 12:20 PM IST

பார்மர் (ராஜஸ்தான்):இறந்த உடலுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

24 வயதான ராஜேஷ் குமார், அவசர சிகிச்சைப் பிரிவில் மரணமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரின் உடலை அந்த இடத்திலிருந்து அகற்றாமல், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர் மருத்துவர்கள்.

ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகள் தொடக்கம்!

விவரம் அறிந்து, இது குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் பேசிய பார்மர் முதன்மை மருத்துவ அலுவலர் (பி.எம்.ஓ) பி.எல். மன்சூரியா, உடலை மணிக்கணக்கில் கவனிக்காமல் வைத்திருக்கும் குற்றச்சாட்டை மறுத்தார். மேலும், உடலை எடுத்துச் செல்ல வாகனம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் 15-20 நிமிடங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டதாகக் கூறினார்.

இறந்த உடலுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை

ABOUT THE AUTHOR

...view details