தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலையான போக்குவரத்திற்கு மாற்று எரிபொருட்களுக்கான விதிமுறைகள் அறிவிப்பு! - மாற்று எரிபொருள்

நிலையான போக்குவரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக பல்வேறு மாற்று எரிபொருட்களுக்கான விதிமுறைகளை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. போக்குவரத்துக்கு சுத்தமான மாற்று எரிபொருளை நோக்கிய பயணத்தில் இது முதற்படி என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

Union Minister Nitin Gadkari
Union Minister Nitin Gadkari

By

Published : Oct 1, 2020, 3:25 PM IST

டெல்லி:ஹைட்ரஜன் கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (ஹெச்- சிஎன்ஜி) பயன்படுத்துவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “போக்குவரத்துக்காக தூய்மையான மாற்று எரிபொருளை பயன்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக, அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயு இஞ்சின்களில் ஹைட்ரஜன் (18 விழுக்காடு) கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை (ஹெச்- சிஎன்ஜி) பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போக்குவரத்துக்காக தூய்மையான எரிபொருள்களின் கீழ் பல்வேறு மாற்று எரிபொருள்களை அமைச்சகம் அறிவித்து வருகிறது.

ஹைட்ரஜன் கலந்த அழுத்தமூட்டப்பட்ட இயற்கை எரிவாயுவை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்துவதற்கான தர நிர்ணயங்களை (IS 17314:2019) இந்திய தர நிர்ணய அலுவலகம் உருவாக்கியுள்ளது” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details