புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு, 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் கடந்த 6 ஆண்டுகளாக 120க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிரந்தரம் செய்வதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷாஜகான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உறுதியளித்தும் இதுவரை செய்யவில்லை என்று பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பணி நிரந்தரம் கோரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்! - புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகம்
புதுச்சேரி: சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் நகரப் பேருந்துகள் இயக்கம் முடங்கியது.
employees
மேலும், கடந்த சில மாதங்களக ஊதியம் சரியாக வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்த அவர்கள், இவற்றை கண்டிக்கும் வகையில் இன்று, புதுச்சேரி போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் போக்குவரத்துத்துறை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இப்போராட்டத்தால் புதுச்சேரி நகரப் பேருந்துகள் எதுவும் இன்று இயக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கோவையில் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்!