கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள 150 வருடங்கள் பழமையான பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பு திருநங்கைகளுக்கும் கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பைப் பெற்ற முதல் திருநங்கையான நதிரா அந்த பல்கலைக்கழகத்தில் முதுகலை அரசியல் அறிவியல் துறையில் சேர்ந்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பயிலப்போகும் முதல் திருநங்கை நதிரா! - thiruvananthapuram
திருவனந்தபுரம் : கேரள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமிதத்தை நதிரா பெற்றுள்ளார்.
பல்கலையில் பயிலப்போகும் முதல் திருநங்கை நதிரா.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”படைப்புமிக்க செயல்களில் ஈடுபடுவேன். இக்கல்லூரி சூழலில் நிலவும் அரசியல் கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்வேன்” என்றார்.
இளங்கலை, இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் பயின்ற நதிரா, திருவனந்தபுரம் மாவட்ட அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும், இந்திய மாணவர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதை விரும்புவதாகவும் கூறினார்.