கடந்த 2014 ஏப்ரல் 15ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து இந்த தினம் தேசிய திருநங்கைகள் தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக புதுச்சேரி அரசாங்கத்தால் இந்த வருடம் திருநங்கைகள் தினத்தை கொண்டாட முடியவில்லை. எனவே திருநங்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சகோதரன் சமூக மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பின்னர் இந்த அமைப்பின் நிறுவன செயலர் ஷீத்தல் பேசுகையில், திருநங்கைகளை புறக்கணிப்பது ஒதுக்குவது தற்போது சமூகத்தில் குறைந்து வருகிறது. ஆனால் எங்களுக்கு இன்றுவரை சமூக உரிமை, அங்கீகாரம் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் ஒன்றே.
புதுவையில் திருநங்கைகள் தின கொண்டாட்டம் தற்போது திருநங்கைகள் பெரும்பாலானோர் சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கான கடன் வசதிகளை எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்துதருகிறோம். எங்களுக்கான சம உரிமை கிடைக்கும் வரையில் தொடர்ந்து சமூகத்தில் போராடுவோம் என்றார்.
இதையும் படிங்க: உபெரில் ஓட்டுநராகும் இந்தியாவின் முதல் திருநங்கை!