கரோனா வைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பணமின்றி தவித்து வருகின்றனர்.
மாற்றுப் பாலினத்தவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு நிவாரணங்கள் அறிவித்திருந்தாலும், அதனைப் பெறுவதற்கு மாற்றுப் பாலினத்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் எதுவும் இல்லை.
இந்நிலையில், 2 ஆயிரம் மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து மத்திய உள்துறை, நிதித்துறை, சமூக நீதித்துறை ஆகிய அமைச்சகங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், ''கரோனா வைரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, எங்களின் வாழ்வாதாரத்தைப் பெரியளவில் பாதித்துள்ளன. அதனால் மத்திய அரசு மாற்றுப் பாலினத்தவர்களுக்கு என சிறப்பு நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.