இது குறித்து அனில் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 10 குழந்தைகள் உட்பட 190 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாலை கோழிக்கோடு கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.
முழுமையான விசாரணையை நடத்திய பின்னரே, சரியாக என்ன நடந்தது என்பதைக் கூற முடியும். மீட்கப்பட்ட கறுப்புப்பெட்டிகளிலிருந்து அனைத்துத் தரவுகளும் கிடைக்கும். விமானத்தின் அசல் கருவிகளை ஆய்வு செய்வதற்கும் குறைபாடுகளை சரிபார்க்கவும் நாங்கள் போயிங்குடன் பேசப் போகிறோம்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO - International Civil Aviation Organization) வகுத்த வழிகாட்டுதல்களின்படி, இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன அமைப்பு, விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) விசாரித்து வருகிறது.
இந்த விபத்து விமானம், விமான நிலையம், மனிதப் பிழை, மழை காரணமாக நடந்ததாகக் கூறப்படுகிறது. மங்களூரு விமான விபத்துக்குப் பிறகு, ஒரு குழு ஓடுபாதைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கின.
கோழிக்கோடு ஓடுபாதையைப் பொறுத்தவரை, அதன் நடைபாதை வலிமையை மேம்படுத்தவும், அதன் ஓடுபாதை மற்றும் பாதுகாப்புப் பகுதியை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.