தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர் - R.Ashok latest press meet

பெங்களூரு: தேச துரோகிகளையும், பாகிஸ்தான் ஆதரவாளர்களையும் நம் நாட்டில் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் தெரிவித்துள்ளார்.

R.Ashok latest press meet
R.Ashok latest press meet

By

Published : Jan 23, 2020, 7:29 PM IST

சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. கர்நாடக வருவாய் துறை அமைச்சர் ஆர். அசோக் பெங்களூருவிலுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டத்தின் முன் அனைவரும் சமம். திருடன் எப்போதும் திருடன்தான். தேசத்துக்கு எதிராக குற்றத்தை செய்தவன் எந்த மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் இங்கு தண்டிக்கப்பட வேண்டும்.

தேச துரோகிகளும், எல்லையை பாதுகாக்கும் ராணுவத்தினரைப் பற்றி தவறாக பேசுபவர்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும். நாங்கள் பாகிஸ்தானையும் அதன் கொடியையும் வெறுக்கிறோம்.

பாகிஸ்தான் எப்போதும் நம் தேசத்தை அழிப்பது குறித்தே எப்போதும் சிந்திக்கிறது. எனவே, நம் நாட்டிலுள்ள அனைவரும் பாகிஸ்தானை அழித்தொழிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'தேவதையை கண்டேன்' பட பாணியில் மனித உரிமை ஆணையத்தில் புகார்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details