இதுதொடர்பாக ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 160 ரூபாய் கொடுத்தால், ஆபரேட்டர்கள் அதிக சேனல்களை வழங்க வேண்டும். இதுதவிர, ஒன்றுக்கும் மேற்பட்ட கேபிள் இணைப்பு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், கூடுதல் இணைப்பு ஒவ்வொன்றுக்கும் 40 விழுக்காடு வரை NCF (Network Capacity Fee) கட்டணம் செலுத்த வேண்டும்.
இனி குறைந்த விலையில் அதிக சேனல்கள் பார்க்கலாம் - ட்ராய் அதிரடி அறிவிப்பு - கேபிள் விதிமுறைகளில் மாற்றம்
டெல்லி : கேபிள் இணைப்புகள் மூலம் தொலைக்காட்சி பார்க்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் அதிக சேனல்களைப் பார்க்க ஏதுவாக, விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்துள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குறை ஆணையம் (ட்ராய்) அறிவித்துள்ளது.
மேலும், 200 சேனல்களுக்கு NCF கட்டணம் ரூ. 130ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அறிவித்துள்ள கட்டாய சேனல்கள் இதில் இடம்பெறாது. நீண்டகால (ஆறு மாதம் அல்லது அதற்கும் மேல்) சந்தாதார்களுக்கு கேபிள் ஆப்ரேட்டர்கள் தள்ளுபடி வழங்கலாம். இதுதொடர்பாக விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசியல் ஆளுமை விருது!