புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்வதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.
புதிய மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை பயிற்சி - புதுச்சேரி சுகாதாரத்துறை
புதுச்சேரி: புதிதாக பணி நியமனம் பெற்ற மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பணியாளர்களுக்கு பயிற்சி
அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இன்று (செப்டம்பர் 9) அரசு மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாதிரிகளைச் சேகரிப்பது, பாதுகாப்பு உடைகளைக் கையாள்வது, அணிவது பரிசோதனைகளை மேற்கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த பயிற்சியை மாவட்ட ஆட்சியரும் சுகாதாரத்துறைச் செயலருமான அருண் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், புதியதாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு அரசின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.