பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விமானப்படையில், தேசிய கேடட் கார்ப்ஸ் படை வீரர்கள், இரண்டை இருக்கை கொண்ட விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அதில், எஸ்.டபிள்.யூ 80 ரக விமானம் புறப்பட்ட உடனேயே திடீரென விபத்துக்குள்ளானது.
பஞ்சாபில் பயிற்சி விமானம் விபத்து - ஒருவர் உயிரிழப்பு - விமானப்படை வீரர் உயிரிழப்பு
சண்டிகர்: பாட்டியாலா நகரில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
patiala-iaf-pilot-killed
இந்த விபத்தில் விமானத்தில் சென்ற தளபதி ஜி.எஸ்.சீமா என்பவர் உயிரிழந்தார். மற்றொருவரான விபின் குமார் யாதவ் காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். விபத்துக்கான காரணத்தை அறிய ஐஏஎஃப் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையும் படங்க:ஜப்பான் செல்கிறது இந்திய விமானப்படை விமானம்