தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் மிராஜ் போர் விமானம் விபத்து: 2 விமானிகள் பலி - மிராஜ் 2000 ரக அதிநவீன போர் விமானம்

பெங்களூர்: இன்று காலை 10.30 அளவில் மிராஜ் 2,000 ரக அதிநவீன போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில் இரண்டு விமானிகள் பலியாகினர்.

flight

By

Published : Feb 1, 2019, 2:52 PM IST

Updated : Feb 1, 2019, 4:39 PM IST

இந்த சம்பவம் ஏமலூர் பகுதியில் உள்ள ஹெச்ஏஎல் (இந்துஸ்தான் விமானநிலையம்) விமான நிலையத்தில் நடந்தேறியுள்ளது.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2,000 ரக விமானம், தலைமை விமானிகளான நெஜி மற்றும் அப்ரோல் இருவரின் தலைமையில் சோதனை ஓட்டமாக பறந்தது. பறந்த சில நிமிடங்களிலேயே விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது.

மீட்புப் பணிகள் நிர்வாக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. இதில், விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார், மற்றொருவர் படுங்காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்துக்கான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்த முடியாத நிலையில், முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

Last Updated : Feb 1, 2019, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details