தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறுந்தகவல் பயன்பாட்டுக்கு வழிவிடும் டிராய் - charge on SMS

ஒரு கைப்பேசி பயனர் தினசரி 100 குறுந்தகவல் அனுப்பும் எஃப்.யூ.பி வரம்பை டிராய்  ரத்து செய்துள்ளது. 100 குறுந்தகவல் அனுப்பப்பட்ட அதன் மீதான 50 பைசா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

trai
trai

By

Published : Jun 4, 2020, 2:59 PM IST

டெல்லி: குறுந்தகவல் கட்டண விதிமுறை தொடர்பாக தொலைத்தொடர்பு கட்டண (65ஆவது திருத்தம்) ஆணை 2020 என்ற வரைவை டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி 100 எஸ்எம்எஸ் தினசரி வரம்பிற்குப் பிறகு 50 பைசா கட்டணத்தை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று டிராய் தெரிவித்துள்ளது.

தொலைதொடர்பு நிறுவனங்கள் தினசரி 100 குறுந்தகவல் என்ற வரம்பிற்குப் பிறகு ஒவ்வொரு குறுந்தகவலுக்கும் குறைந்தது 50 பைசா வசூலிக்கிறார்கள். இந்த விதி 2012ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு டிராய் பயனர்களுக்கான டிஎன்டி சேவையையும் தொடங்கியது. இதன் மூலம் பயனர்கள் தங்கள் எண்களில் விளம்பரம் தொடர்பான செய்திகளை நிறுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது டிராய் தினசரி 100 குறுந்தகவல் அனுப்பும் எஃப்.யூ.பி வரம்பை டிராய் ரத்து செய்துள்ளது. அதாவது டிராய் தொலைத்தொடர்பு கட்டண(65ஆவது திருத்தம்) உத்தரவு, 2020ஐ உருவாக்கியது. இந்த ஆண்டில் எஸ்எம்எஸ் தொடர்பான பொருந்தக்கூடிய விதிகளை திரும்பப் பெற முன்மொழியப்பட்டது. அதன்படி தினசரி 100க்கும் மேல் அனுப்பப்படும் குறுந்தகவலுக்கான 50 பைசா கட்டணத்தை நீக்க டிராய் முடிவெடுத்துள்ளது. இதற்குவேண்டி மார்ச் 3ஆம் தேதிக்குள் பங்குதாரர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ கருத்துக்களையும், மார்ச் 17க்குள் எதிர் கருத்துகளையும் டிராய் கேட்டு கொண்டது. இதற்குபின்பு தான் டிராய் இந்த முடிவை எடுத்துள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details