தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சசி தரூரின் அவதூறு வழக்கு: மத்திய சட்ட அமைச்சருக்கு சம்மன் - அவதூறு வழக்கில் ரவி சங்கருக்கு சம்மன்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Shashi
Shashi

By

Published : Feb 15, 2020, 6:01 PM IST

சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கின் குற்றவாளி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்தான் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசி தரூர், ரவி சங்கர் பிரசாத் தன் மீது அவதூறு பரப்புவதாகவும், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சசி தரூர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து சசி தரூர் கூறுகையில், “சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கு முடிவடைந்துவிட்டது. இது கொலை வழக்கு அல்ல என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ரவி சங்கருக்கு சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மே 2ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ரவி சங்கர் பிரசாத் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘அரசியலமைப்பைப் போராடி மீட்க வேண்டும்’ - இயக்குநர் அனுராக் காஷ்யப்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details