தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு பாலில் தான் நச்சுத்தன்மை அதிகம்- மத்திய அரசு தகவல்...! - நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்

டெல்லி: தமிழ்நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

milk

By

Published : Nov 22, 2019, 4:38 PM IST

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமையன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காற்று மாசு, காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் விவாத பொருளாக மாறியது. நேற்று தேர்தல் நிதிபத்திரத்தில் முறைகேடுகள் நந்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடிய போது, பாலில் நச்சுத்தன்மை கலக்கப்படுவதாகக் கூறப்படுகிறதே என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, 'தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் "Aflatoxin M1" என்ற நச்சுத்தன்மை உள்ளது' என்றார்.

இதில் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதற்கு, அடுத்த இடங்களில் டில்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன. உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், தமிழ்நாட்டில் 551 பால் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தது, ' இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க : கூட்டாட்சிக்கு உயிர் கொடுக்கும் ராஜ்ய சபா!

ABOUT THE AUTHOR

...view details