கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாகச் சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால், சாலை வரி உள்ளிட்ட போக்குவரத்து வரிகளை கட்ட வேண்டும் என புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை அறிவித்தது.
இதனிடையே, வருமானம் இல்லாமல் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சாலை வரி உள்ளிட்ட வரிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், வரியை தள்ளுபடி செய்ய கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் அரசு போக்குவரத்து துறை அலுவலக ஆணையரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.