புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் நோணாங்குப்பம் படகு குழாம், கடற்கரை சாலையில் உள்ள அரசு உணவு விடுதி, உசுட்டேரி படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சமையல் வேலை, படகு இயக்குபவர்கள் என மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி உப்பளம் பகுதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் அமர்ந்து, கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.