ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் 61 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து 30 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து! - கிழக்க கோதாவரி மாவட்டம்
அமராவதி: கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் பயணித்த 61 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
படகு
இந்நிலையில் படகில் பயணித்த 61 பேரில் 17 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதமுள்ளவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
Last Updated : Sep 15, 2019, 6:32 PM IST