கோவா முன்னாள் முதலமைச்சர் பரிக்கர் மறைவுக்கு பிறகு, கோவா சட்டப்பேரவை நொடிக்கு நொடி மாற்றத்துக்குள்ளாகிறது.
நொடிக்கு நொடி மாறும் கோவா சட்டப்பேரவை! - deputy Cm
பானாஜி: கோவா இரண்டாவது துணை முதலமைச்சராக சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அஷ்கவுன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோவா துணை முதலமைச்சராக மனோகர் அஷ்கவுன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை அமைச்சரான இவர் பாஜக கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக கோவா பார்வர்ட் பிளாக் கட்சி எம்எல்ஏ விஜய் சர்தேசாயும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சுதின் தாவலிங்கரும் துணை முதலமைச்சராக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டதால் சுதின் தாவலிங்கர் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பாஜகவை சேர்ந்த மனோகர் அஷ்கவுன்கர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.