கேரளாவில் கரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள், இன்று(அக்.16) முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படுகிறது என கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி - Kerala Tourism Development Corporation) தெரிவித்துள்ளது.
'பணிநீக்கம் கிடையாது... ஊதியக் குறைப்பு கிடையாது' - கரோனாவிலும் ஊழியர்களை கவனித்துக்கொண்ட கே.டி.டி.சி! - கேரளா சுற்றுலா தளங்கள் திறப்பு
திருவனந்தபுரம்: கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்ட சமயத்திலும், ஒரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்றும், ஊதிய குறைப்பும் செய்யவில்லை எனவும் கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (கே.டி.டி.சி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள சுற்றுலா மேம்பாட்டுக் கழகத் (கே.டி.டி.சி) தலைவர் விஜய்குமார் கூறுகையில், 'சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகளை 7 நாள்கள் தனிமைப்படுத்துவது சாத்தியம் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் கே.டி.டி.சி ஒரு புதிய அணுகுமுறையை 'கோவிட் காலங்களில்' மாற்றி வருகிறது. கடற்கரைப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களைத் தவிர, ஏற்கெனவே அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. கரோனா விதிமுறைகளின்படி, பார்வையாளர்களை அனுமதித்தோம். மலையோரம் உள்ள சுற்றுலா தலங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அனைத்து விடுதிகளும் திறக்கப்படவில்லை' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் 4 ஸ்டார் விடுதிகள் ஆறு மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும். தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதத்திற்குப் பிறகு மாநிலத்தின் சுற்றுலா நிறுவனம் நெருக்கடியைச் சந்தித்த போதிலும், கே.டி.டி.சி ஒரு ஊழியரைக் கூட பணிநீக்கம் செய்யவில்லை. அனைத்து ஊழியர்களுக்கும் எல்லா மாதங்களுக்கும் சம்பளம் தந்துள்ளது" எனத் தெரிவித்தார்.