தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இதுவரை ரூ.2426 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணைய இயக்குநர் தகவல்! - பறிமுதல்

டெல்லி: 2019 மக்களவைத் தேர்தலில் இதுவரை 2,426 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குநர் திலீப் சர்மா தகவல் தெரிவித்தார்.

Total seizures worth Rs 2426 crore in LS polls so far: EC

By

Published : Apr 12, 2019, 10:20 AM IST

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதனையடுத்து டெல்லியில் தேர்தல் ஆணைய இயக்குநர் திலீப் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, '2019 மக்களவைத் தேர்தல் பறக்கும் படையினரால் 11 ஏப்ரல் மாலை 6 மணி வரை ரொக்கம், மதுபானம் மற்றும் பொருட்கள் உட்பட சுமார் 2,426 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளது' என்றார்.

இந்தத் தேர்தல் சோதனையில், வருமானவரித் துறையினர் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details