இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, ”இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, 29 ஆயிரத்து 442 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை8 லட்சத்து 50 ஆயிரத்து 358ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவால் 22 ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி 551 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை5 லட்சத்து 36 ஆயிரத்து 231ஆக உள்ளது. அதன்படி 63 விழுக்காட்டினர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.