கடந்தாண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் கோவிட் 19 வைரசின் தாக்கம் அதிகரித்துவருகிறது.
மேலும் இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வைரஸ் தொற்றைக் குறைக்க பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.