தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 600-ஐ கடந்த கரோனா பாதிப்பு! - 649 பேர் கரோனா வைரஸால் பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐக் கடந்துள்ளது.

Total No of #COVID19 positive cases rise to 649 in India
Total No of #COVID19 positive cases rise to 649 in India

By

Published : Mar 26, 2020, 11:24 AM IST

Updated : Mar 26, 2020, 11:36 AM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது. வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் நிலையில், தற்போது இந்தியாவில கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பதிவு

இதுவரை இந்தியாவில், 593 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், அதில் 42 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 13 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் 15 லட்சத்து 24 ஆயிரத்து, 266 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு 562ஆக உயர்வு!

Last Updated : Mar 26, 2020, 11:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details