மேர்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் உள்ள மேனகா தியேட்டர் அருகே நேற்றிரவு காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தபோது, அவர் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காவல்நிலையத்தில் இருந்த போதை நபர் தனது நண்பர்களிடம் தவறு ஏதும் செய்யாதபட்சத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்தார். இதையடுத்து இளைஞரின் உறவினர்கள் சுமார் 100பேர் காவல் நிலையத்தின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்நிலையத்தில் புகுந்து தாக்குல் நடத்திய பெண்கள் உட்பட 11பேர் கைது - 11பேர் கைது
கொல்கத்தா: காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்கிய இரண்டு பெண்கள் உட்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆனாலும் காவல் துறையினர் அந்த இளைஞரை விடுதலை செய்யாததால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் இதுகுறித்து காவல் துறை ஆணையர் அனுஜ் ஷர்மா உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், போராட்டக்காரர்கள் அனைவரும் அருகில் உள்ள சேரி குடியிப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அங்கு சென்ற காவல் துறையினர் இரண்டு பெண்கள் உட்பட 11பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.