வடக்கு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடி தரும் வகையில், பாதுகாப்புப் படை நடத்திய எதிர்த் தாக்குதலில் அமைப்பின் முக்கியப் படைத்தளபதி உள்பட மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பபட்டனர். தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும், அதில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.
படுகாயம் அடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் தலைமை இயக்குநர் தில்பாக் சிங் கூறுகையில், "வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு வீரர்களும், காவல் சிறப்புஅலுவலர் ஒருவரும் உயிரிழந்தனர்.