தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் ராணுவ உயர்மட்ட குழு முக்கிய ஆலோசனை - NSA Ajit Doval

Top Army
Top Army

By

Published : May 27, 2020, 11:33 AM IST

Updated : May 27, 2020, 1:06 PM IST

11:27 May 27

இந்தியா - சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் ராணுவக் குவிப்பு நடவடிக்கையில் சீனா ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய ராணுவத் தளபதி எம்.எம். நரவனே தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. 

இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு உயர் அலுவலர்கள் தொடங்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் சீன விவகாரம் தொடர்பான முக்கிய வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, இந்தியா - சீனா இருநாட்டு ராணுவத்தினர் இடையே ஐந்து கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பாங்கோங் சோ செக்டர், கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அதன் ராணுவத்தை குவித்துள்ள நிலையில், அதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுதவிர, லடாக்கின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள டிரிக் ஹைட்ஸ், டெம்சோக், சும்மார் ஆகிய பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க:முகக்கவசத்தில் இனி உங்களது முகம்: அசத்தும் டிஜிட்டல் ஸ்டுடியோ!

Last Updated : May 27, 2020, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details