தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடேங்கப்பா... இப்படி ஒரு வாக்குச்சாவடியா? - Election festival

டெல்லி: ஆறாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் டெல்லியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

pink-polling-booth

By

Published : May 12, 2019, 9:07 AM IST

Updated : May 12, 2019, 10:03 AM IST

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில், 59 தொகுதிகளுக்கு இன்று ஆறாவது கட்டமாக தேர்தல் நடைபெற்றுவருகிறது.

வாக்காளர்களுக்காக டோக்கன் முறை

உத்தரப் பிரதேசம் 14 தொகுதிகள், ஹரியானா 10 தொகுதிகள், பிகார் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 8 தொகுதிகள், மேற்கு வங்கம் 8 தொகுதிகள், டெல்லி 7 தொகுதிகள், ஜார்க்கண்ட் 4 தொகுதிகள் என மொத்தம் 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பிங்க் போலிங் பூத்

இந்நிலையில், கிழக்கு டெல்லி கைதல் பகுதி 147ஆவது வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரும் வாக்காளர்களை கவரும் விதமாக அப்பகுதி முழுவதும் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு பணியில் உள்ள தேர்தல் அலுவலர்களும் பிங்க் நிறத்தில் உடையணிந்திருந்தது வாக்காளர்களை வெகுவாக கவர்ந்தது.

டோக்கன் முறை

இதேபோல், மேற்கு டெல்லியில் பிந்தாபூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் மக்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் மக்கள் வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்காமல், உட்காரும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Last Updated : May 12, 2019, 10:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details