தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக இங்கு காணலாம்.

News Today @ 05-10-2020 Today's News headlines from TN, National and world Today's News headlines இன்றைய செய்திகள் இன்றைய தலைப்புச் செய்திகள் உலகம், இந்தியா, தமிழ்நாடு
News Today @ 05-10-2020 Today's News headlines from TN, National and world Today's News headlines இன்றைய செய்திகள் இன்றைய தலைப்புச் செய்திகள் உலகம், இந்தியா, தமிழ்நாடு

By

Published : Oct 5, 2020, 7:10 AM IST

Updated : Oct 5, 2020, 7:55 AM IST

  1. தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.5) சந்திக்கிறார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  2. ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரகப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலை மற்றும் முக்கியமான இடங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
    ராகுல், பிரியங்கா
  3. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி திமுக மகளிரணியினர் கனிமொழி தலைமையில் கையில் ஒளியேந்தி மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணி செல்கின்றனர்.
    கனிமொழி எம்.பி.
  4. ஊரடங்கு காலத்தில் கரோனா முன்களப்பணியாளர்களுக்காக தெற்கு ரெயில்வே சார்பில் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி, மூர்மார்க்கெட்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 28 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், அத்தியாவசிய மற்றும் முன்களப் பணியாளர்களுக்காக சென்னையில் இன்று முதல் 38 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
    ரயில் சேவை
  5. துபாய் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்ச் பெங்களூரு அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
    ஐபிஎல்
  6. 2ஜி வழக்குத் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது. முதல்கட்ட விசாரணை மதியம் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லி உயர்நீதிமன்றம்
  7. தமிழ்நாட்டில் சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மழைக்கு வாய்ப்பு
  8. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 42ஆவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் மாநிலங்களின் இழப்பு குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் (கோப்பு படம்)
  9. ஆறு மாதத்துக்குப் பிறகு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை எழும்பூரிலிருந்து இன்று (அக்.5) இரவு 8.45 மணிக்கு மறுமார்க்கமாக செங்கோட்டைக்கு தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த ரயில் நேற்று காலை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கியது நினைவு கூரத்தக்கது.
    சென்னை-செங்கோட்டை ரயில்
  10. திமுக எம்.பி. எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் காலமான நிலையில் அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழச்சி தங்கபாண்டியனின் தாயார் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    தமிழச்சி தங்கபாண்டியன் தாயார்
  11. உத்தரப் பிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து திராவிடர் கழகத்தினர் இன்று மதியம் 11 மணிக்கு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
    தி.க. தலைவர் கி.வீரமணி
  12. விஷால் நடித்துள்ள சக்ரா படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
    நடிகர் விஷால்
Last Updated : Oct 5, 2020, 7:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details