தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - கேஜிஎஃப்-2 படப்பிடிப்பு தொடக்கம்

இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக காணலாம்.

NEWS TODAY Today's News Headlines from Tamilnadu, India & World - Etv bharat புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு ஜன் அந்தோலன் விழிப்புணர்வு இயக்கம் இந்திய விமானப் படை தினம் ஆர்பிஐ ஆய்வுக் கூட்டம் கேஜிஎஃப்-2 படப்பிடிப்பு தொடக்கம் ஐபிஎல் இன்றைய போட்டிகள்
NEWS TODAY Today's News Headlines from Tamilnadu, India & World - Etv bharat புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு ஜன் அந்தோலன் விழிப்புணர்வு இயக்கம் இந்திய விமானப் படை தினம் ஆர்பிஐ ஆய்வுக் கூட்டம் கேஜிஎஃப்-2 படப்பிடிப்பு தொடக்கம் ஐபிஎல் இன்றைய போட்டிகள்

By

Published : Oct 8, 2020, 6:56 AM IST

  1. பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் கரோனா தடுப்பு விழிப்புணர்வு பரப்புரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். நாட்டில் கரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா கண்டறியும் சோதனையும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் கரோனா பரவல் குறையவில்லை. ஆகவே பண்டிகை காலத்தில் கரோனா தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் 'ஜன் அந்தோலன்' என்ற மக்கள் இயக்கம் பிரதமர் நரேந்திர மோடியால் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படுகிறது.
    பிரதமர் நரேந்திர மோடி
  2. இந்தியப் பாதுகாப்புப் படை அணியின் ஒரு முக்கிய அங்கமாக இந்திய விமானப் படை உள்ளது. இந்த படையானது 1932-இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அந்த வகையில் இன்று விமானப் படை தினம் ஆகும். இரண்டாம் உலகபோரின்போது ஜப்பான் மற்றும் பர்மா கூட்டுப் படைகளை தடுத்து நிறுத்தியதில் இந்திய விமானப் படை முக்கிய பங்கு வகித்தது நினைவுக்கூரத்தக்கது.
    இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்
  3. ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கை ஆய்வுக் குழு கூட்டம், மும்பையில் புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிதிக் கொள்கை தொடா்பாக விரிவாக இன்றும் விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.
    இந்திய ரிசர்வ் வங்கி
  4. புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
    பள்ளி மாணவ- மாணவியர்
  5. நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகும் ’கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வியாழக்கிழமை(அக்.08) முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
    கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் போஸ்டர்
  6. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் திருவிழா

ABOUT THE AUTHOR

...view details