- இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும், “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கிவைக்கிறார்.
- கரோனா சிகிச்சை முடிவடைந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று முதல் மீண்டும் அரசு பணிகளை கவனிக்க உள்ளார். அந்நாட்டில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட தனக்காக பிரார்தித்த அனைவருக்கு நன்றி என ட்ரம்ப் ட்விட்டரில் கூறியிருந்தார்.
- உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், கோயம்புத்தூா், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மருத்துவமனையில் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் திங்கள்கிழமை (அக்.12) நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர். இந்நிலையில் அவரின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அலுவலராக மாவட்ட நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து, இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை பலரும் தற்போது நினைவு கூர்ந்துவருகின்றனர்.
- “பிரதாப முதலியார் சரித்திரம்” என்ற தமிழின் முதல் புதின நூலை படைத்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்ததினம் இன்று. இவர், திருச்சி மாவட்டம், குளத்துாரில், 1826 பிறந்தவராவார்.
- உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வறை நுழைவு சீட்டை www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
- ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாலை 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்து, 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் பிறந்தவராவார்.
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்ததினம்
இன்றைய முக்கியச் செய்திகள், நிகழ்வுகளைப் பற்றி சுருக்கமாக இங்கு காணலாம்.
Today's National & World News Headlines Breaking News- EtvBharat.com இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday PM Modi to launch rural property cards 1138 Aleppo earthquake சிரியாவின் அலேப்பே நிலநடுக்கம் 1737 Calcutta Earthquake hansie cronje 1737 கொல்கத்தா நிலநடுக்கம் ஹன்சி குரோன்ஞ் Amitabh Bachchan birthday world childrens day பிரதாப முதலியார் சரித்திரம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்ததினம் அமிதாப்பச்சன் 78ஆவது பிறந்தநாள்
வரலாற்றில் இன்று...!
- 1138ஆம் ஆண்டு சிரியாவின் அலேப்பே நகரில் நடந்த நிலநடுக்கத்தில் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
- 1797ஆம் ஆடு கொல்கத்தாவில் நடந்த பூமி அதிர்ச்சியில் மூன்று லட்சம் பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த கொல்கத்தா நகரமே பாதிக்கப்பட்டது.
- கிரிக்கெட் சூதாட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹன்சி குரோன்ஞ்க்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.