ஹரியானாவில் பாஜக-ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் மனோகர் லால் கட்டாரை முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹரியானாவில் உள்ள ராஜ் பவனில், பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்பு நடைபெறள்ளது. அதில் இரண்டாம் முறையாக முதலமைச்சராக மனோகர் லால் கட்டாருக்கும், துணை முதலமைச்சராக துஷ்யந்த் சௌதாலாவிற்கும் அம்மாநில ஆளுநர் சத்யதியோ ஆர்யா பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். இவர்களுடன் அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி நட்டாவுடன், ஹிமாச்சல், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளகின்றனர்.