ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் இம்மானுவேல் போனி, பிரதமர் மோடியை நேற்று நேரில் சந்தித்தார்.
ஃபிரான்ஸ் பாதுகாப்பு ஆலோசகர், பிரதமர் மோடி சந்திப்பு! - இந்தியவிற்கு ரஃபேல் விமானங்கள் இறக்குமதி தேதி
டெல்லி: ரஃபேல் விமானம் இறக்குமதி குறித்து ஃபிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் இம்மானுவேல் போனி, பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது, பிரதமர் மோடி கடந்த வாரம் ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் மேக்ரானை ஜி7 மாநாட்டில் சந்தித்தார். அதில் இந்தியாவிற்கு ரஃபேல் விமானங்களை செப்டம்பர் மாதம் வழங்க இருப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர், இதை உறுதி செய்யும் விதமாக இம்மானுவேல் போனி, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார்.
2016இல் இந்தியா 36 ரஃபேல் விமானங்களை சுமார் 7.8 பில்லியன் ஈரோஸ் செலவில், ஃபிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதனால் செப்டம்பர் 20ஆம் தேதி ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், ஃபிரான்ஸ் நாட்டில் இருக்கும் ரஃபேல் விமானங்களை காட்டிலும், இந்தியாவிற்கு வழங்கப்படும் விமானங்கள் சற்று அதிநவீனமானது என்று அந்நாட்டு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.