தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண் மீது மோகம் கொண்ட 60 வயது முதியவர்; மகன்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம்! - மகன்கள் அளித்த அதிர்ச்சி வைத்தியம்

பெங்களூரு: மனைவியை இழந்த 60 வயது முதியவர் ஒருவர், மோகம் கொண்டு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றதால் அவரது மகன்களும், குடும்பத்தினரும் அந்த முதியவருக்கு அளித்த அதிர்ச்சி வைத்தியம் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

By

Published : Sep 25, 2019, 9:13 PM IST

கர்நாடக மாநிலம் சிக்பெலாபூர் மாவட்டம் பேகப்பல்லி கிராமம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் மகன்களே தந்தையின் ஆண்குறி நீக்குவதற்கு காரணமான சம்பவம் வெளியாகி பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதான முதியவர் ஒருவர் அந்த கிராமத்தில் உள்ள பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் வீட்டிற்குத் தெரியவர, பெண்ணின் குடும்பத்தினர் முதியவரின் மகன்களிடம் புகாரளித்துள்ளனர்.

அதனையடுத்து, அவரின் மகன்கள், தந்தையின் ஆண்குறியில் தண்ணீர் பாட்டில் மூடியோடு சேர்த்து இரும்பு திருகாணிகளை கட்டிவைத்து தண்டனை வழங்கியுள்ளனர். சுமார் ஒரு மாதத்திற்கு அந்த முதியவர் அதே நிலையில் இருந்ததால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அந்த முதியவரை கோலார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆண்குறியை நீக்கினால் மட்டுமே அவரது உடல்நிலை சீராகும் எனத் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அந்த முதியவரின் ஆண்குறியை நீக்கி தற்போது உடல்நிலை சீராக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

பெண் மீது கொண்ட மோகத்தால் தந்தைக்கு மகன்கள் வழங்கிய தண்டனை அவரது ஆண்குறிக்கே பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details