தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாஜ்மஹால் அருகே, காற்று சுத்திகரிப்பு வாகனம் நிறுத்தம் - tajmahal air purifying van

லக்னோ: தாஜ்மஹால் அருகே மாசடைந்த காற்றை சுத்தப்படுத்தும் வசதிகள் கொண்ட வேன் ஒன்றை உத்தரப் பிரதேச அரசு நிறுத்தியுள்ளது.

தாஜ்மஹால்

By

Published : Nov 4, 2019, 11:56 AM IST

Updated : Nov 4, 2019, 12:09 PM IST

தீபாவளி பண்டிகைக்கு பின்னர், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுப்பாடு அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்திருக்கும் உலக சுற்றுலா தலமான தாஜ்மஹால் பாதிப்படையும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.

குறிப்பாக இந்த பனி, காற்று மாசுபாடு காரணமாக மூத்த குடிமக்கள் மூச்சு விடுவதிலும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். இதையடுத்து அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம் ஒன்றை தாஜ்மஹாலின் வாசலில் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த தானியங்கி காற்று சுத்திகரிப்பு வாகனம், அசுத்தமடைந்த காற்றை சுத்தம் செய்யும். டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்கத்துக்கு மாறாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: காற்றின் தன்மை குறித்த ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

Last Updated : Nov 4, 2019, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details