தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கில் மாணவர்கள் நலனுக்காக 'GetCETGo' அறிமுகம் !

By

Published : Apr 20, 2020, 6:28 PM IST

பெங்களூரு: மாணவர்கள் எழுதும் நீட், கர்நாடகா பொது நுழைவு தேர்வுகளுக்காக 'GetCETGo' இணைய வழிக் கல்வியை கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் படுத்தியுள்ளார்.

TNGovt #Lockdown - May
TNGovt #Lockdown - May

கரோனா தாக்கம் குறையாத காரணத்தினால் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள இச்சமயத்தில் பொது நுழைவு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காவும், நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காவும் 'GetCETGo' என்ற பெயரில் இணைய வழிக்கல்வியை முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்துள்ளார்.

சிஞ்சு இன்போடெக், தீக்ஷா ஆன்லைன் ஆகியோர் இணைந்து உருவாக்கிய ஆன்லைன் இணைய வழிக்கல்வியை கணினி, ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றில் மாணவர்கள் எளிதாக பெற்று பயனடைய முடியும். இதில், பயிற்சி வினாத்தாள், காணொலிகள், மாதிரி தேர்வு உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 1 லட்சத்தி 94 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊடகவியலாளர்கள் 30 பேருக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details