புதுச்சேரியைச் சேர்ந்த தன்னார்வ சட்ட ஆர்வலர் ஆனந்தன் என்பவர், நீர்ப் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக தனது வாகனத்தில் புதிய முறையில் பழங்கால ஓலைக் குடிசை ஒன்றை பொருத்தியுள்ளார். இப்பயணத்தின் போது நீரைச் சேமிப்பது குறித்தும் நீரைச் சிக்கனமாகக் கையாளுவது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கி செல்கிறார்.
"மழைநீர் சேகரிப்பு குறித்து நூதன முறையில் பிரச்சாரம்" - puducheri
புதுச்சேரி: மழைநீர் சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ சட்ட ஆர்வலர் ஆனந்தன், தனது இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
சட்ட ஆர்வலர் ஆனந்தன்
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தொடங்கப்பட்ட இந்த பயணத்தை, போக்குவரத்து ஆய்வாளர் ஜெயராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். புதுச்சேரியிலிருந்து சென்னை வரை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆனந்தனின் இரு சக்கர வாகனம் ஓலைக் குடிசை பொருத்தப்பட்டு வினோதமாக இருப்பதால், பள்ளி மாணவர்கள், பொது மக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.