புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் கந்தவேலு செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, புதுச்சேரியில் 80.5 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளது என்றும் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் 76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 80% சதவிகித வாக்குப்பதிவு...! - வாக்குப்பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 80.5% வாக்குகள் பதிவாகியுள்ளது என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 80% சதவிகித வாக்குப்பதிவு
தொடர்ந்து பேசிய அவர் இந்த முறை கிராம பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் 86 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக 66 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளது எனப் புள்ளி விபரம் தெரிவித்தார்.
மேலும் கடந்த தேர்தலில் 82% பதிவாகி இருந்தது என்றும், புதுச்சேரியில் எந்த ஒரு அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.