இது குறித்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரெஞ்சு தூதரக அதிகாரி காத்தரின் ஸ்டூவர்ட், பிரெஞ்ச் கலாச்சாரத்தின் ஜன்னல் புதுச்சேரி என்ற பெருமையை பறைசாற்றும் வகையில் புதுச்சேரியில் பிரெஞ்சு தூதரகம் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன
பாண்டி மெரினாவில் கலை விழா - பிரெஞ்சு தூதரக அதிகாரி
புதுச்சேரி: ஃப்ராங்கோ போன்ஸ் என்ற தலைப்பில் வரும் 21ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை பாண்டி மெரினா கடற்கரையில் கலை விழா நடைபெறும் என்று புதுச்சேரி பிரெஞ்சு தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு ஃப்ராங்கோ போன்ஸ் என்ற தலைப்பில் ஐந்து நாள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். புதுச்சேரி கடற்கரை காந்தி திடல், திப்ரா பேட்டை பகுதியில் உள்ள பாண்டி மெரினா பீச் மற்றும் பிரெஞ்ச் நிறுவனங்களில் நடைபெறும் இந்த விழாவில் சர்க்கஸ், நாடகம், நாட்டியம், இசை போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் கேரளா, மத்திய ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
கலை விழாவிற்கு வருவதற்கான சிறப்பு பேருந்துகளை புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது'என்றார்.