தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் சர்வர் பிரச்னை; ஆன்லைன் விண்ணப்பம் நிறுத்தம்!

புதுச்சேரி: கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் மாணவ மாணவிகள் ஏமாற்றமைடந்தனர்.

ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

By

Published : May 15, 2019, 6:01 PM IST

புதுச்சேரி மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் 'சென்ட்க்' எனப்படும் ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை குழு மூலம் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்தாண்டு 9715 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதில் பொறியியல் படிப்புக்கு 3776, கலை, அறிவியல், வணிகவியல் பாடங்களுக்கு 4923 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த மாணவர் சேர்க்கைக்கு 6 கல்லூரிகள், 72 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 59 மேல்நிலைப் பள்ளிகளில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதியம் 12 மணி வரை தொடங்கவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது குறித்து மாணவி சங்கீதா கூறுகையில், "கம்ப்யூட்டர் சர்வர் பிரச்னையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. வேறு மையத்திக்கு சென்று பதிவேற்றம் செய்யுமாறு அலுவலர்கள் கூறினர். காலை முதல் ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான காத்திருந்து கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது", என்றார்.

ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காத்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம்

இதுகுறித்து உதவி மையம் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறுகையில், "முதல் நாள் என்பதால் ஆன்லைன் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஆன்லைன் விண்ணப்பம் நடக்கவில்லை" என்றார்.

புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு ஒருங்கிணைந்து சேர்க்கையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க காலை 8 மணி முதலே காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ABOUT THE AUTHOR

...view details