தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்! - புதுச்சேரி

புதுச்சேரி : அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/07-September-2019/4369485_860_4369485_1567865981275.png

By

Published : Sep 7, 2019, 8:01 PM IST

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் இன்று புதுச்சேரி தொழிலாளர் துறை அலுவலகத்தில் தனியார் கம்பெனிகள் பங்கேற்ற வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் எம்ஆர்எப், வேல் போல், ஆகாஷ், மேனா டெக் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் 400க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.

புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமினை தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, தொழிலாளர் துறை இயக்குனர் வல்லவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 18 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை கல்வி தகுதி கொண்ட நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தொழிலாளர் துறை அலுவலகம் செய்தது. மேலும், இந்த முகாமில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் முகாமில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details