புதுச்சேரியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காந்திவீதி, நேரு வீதி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோர கடைகள் அமைக்கப்பட்டு வந்தது. இந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் செயல்படுவதால் இதை சண்டே மார்க்கெட் என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.
கடையை அடைத்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் ஊர்வலம்... - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: சண்டே மார்க்கெட் வியாபாரிகள் ஊர்வலமாக சென்று முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
கடையை அடைத்து சண்டே மார்க்கெட் வியாபாரிகள் ஊர்வலம்...
இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஞாயிற்றுக்கிழமை சந்தையால் அந்தப்பகுதியில் உள்ள கடைகளின் வியாபாரம் பாதிப்பதாகவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவாதகவும் கூறி அங்குள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள்கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.
மேலும் 1000 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காந்திவீதியில் இருந்து ஊர்வலமாக நேருவீதி, மாதா கோயில் வீதி வழியாக சென்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளித்தனர்.