முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த ஒரு மாதமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
அருண் ஜேட்லி உடலுக்கு துணை முதலமைச்சர், அமைச்சர்கள் அஞ்சலி... - முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி
டெல்லி : பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி உடலுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி
இந்நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து துணை முதலமைச்சர், ஒ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினர்.