களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலைசெய்யப்பட்டார்.
இந்தக் குற்றவாளிகளைப் பிடிக்க பத்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவலர்கள், தமிழ்நாடு - கேரள எல்லையில் சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளையும் ஆய்வுசெய்தனர்.
வில்சனை சுட்டுக்கொன்ற இருவரும் 10 கிலோமீட்டர் தூரம் நெய்யாற்றின் கரை வழியாக கேரளாவுக்கு நடந்துசென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
அவர்களின் கைகளில் கறுப்பு பை ஒன்றும் காணப்படுகிறது. சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் தொடர்பாகப் புகைப்படங்களை முன்னதாக காவல் துறை வெளியிட்டிருந்தது.
இந்தக் கொலையில் தவுபிக், அப்துல் ஹமீம் ஆகியோர் ஈடுபட்டார்கள் என்றும் அவர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகவும் காவலர்கள் சந்தேகிக்கின்றனர்.
களியக்காவிளை எஸ்.ஐ. கொலையில் துப்பு துலங்கியது! இந்நிலையில் தவுபிக், ஹமீம் ஆகியோருடன் தொடர்பிலிருந்ததாக தமிழ்நாடு, கேரளாவில் சிலரை காவலர்கள் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் புகைப்படம் வெளியீடு..!