தமிழ்நாட்டிலிருந்து நேற்று (செப்டம்பர் 7) முதல் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
அதன்படி புதுச்சேரி எல்லையில் சென்னை - விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் திண்டிவனம் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி வந்தன. அவற்றை கோரிமேடு எல்லையில் புதுச்சேரி காவல் துறையினர் இன்றும் தடுத்து நிறுத்தி மாநில எல்லைக்குள் அனுமதிக்கவில்லை, இதனால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.
இதையடுத்து புதுச்சேரிக்கு, தமிழ்நாட்டு பேருந்தில் வந்தவர்கள் கோரிமேடு எல்லையில் இறக்கி புதுச்சேரிக்கு நடந்து செல்கின்றனர். இதேபோல் புதுச்சேரியில் இருந்து பயணிகள் தமிழ்நாடு பேருந்தில் பயணிக்க புதுச்சேரி மாநில எல்லையிக்கு செல்கின்றனர்.
புதுச்சேரிக்குள் தமிழ்நாடு பேருந்துகளுக்கு அனுமதியில்லை! - puducherry latest news
புதுச்சேரி: தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படவில்லை.
கடலூர் மார்க்கத்திலிருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் விழுப்புரம் வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன. புதுச்சேரி அரசுப் பேருந்துகள் தமிழ்நாடு பகுதிகளுக்கு இயக்க அனுமதி வழங்கவில்லை. ஆனால் புதுச்சேரியின் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி இருந்தும் இயக்கப்படவில்லை.
ஆகவே இருமாநில அரசு அலுவலர்கள் ஓரிரு தினங்களில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருமாநிலத்திற்கான போக்குவரத்து மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.